யாழில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு..!

0

இன்றைய தினம் (01) யாழில் கொரோனா தொற்று நோயாளர்களின் உறுதி செய்யபட்ட மொத்த எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளதாக வைத்தியர் ரஜீவ் ஜீ மூர்த்தி தனது உத்தியோக பூர்வ முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


இதற்கமைவாக இன்றைய தினத்தில் மதபோதகர் உட்பட புதிதாக உறுதி செய்யப்பட்ட மூன்று நோயாளர்கள் யாழ்ப்பாணத்தில் பதிவாகியுள்ளனர்.


அத்துடன் இத்தொகை மேலும் அதிகரிக்கக் கூடும் எனவும் எதிர்வு கூறியுள்ளார்.


இதேவேளை நாட்டில் இதுவரை 126 பேர் தொடர்ந்தும் வைத்திய சாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.