யாழில் மற்றுமொரு போதகருக்கும் கொரோனா; நோயாளர் எண்ணிக்கை 146 ஆக உயர்வு..!

0

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 146ஆக உயர்வடைந்துள்ளது. அதே வேளை யாழ்ப்பாணத்தில் மற்றும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள சுவிஸ் போதருடன் தொடர்பில் இருந்த மத போதகர் ஒருவருக்கே இவ்வாறு கோரோனா வைரஸ் தொற்று உறுதிப் படுத்தப்பட்டுள்ளது.

இன்றைய தினம் (2020.04.01) கொரோனா வைரசு தொற்று நோயாளர்களின் உறுதி செய்யபட்ட மொத்த எண்ணிக்கை 146 அகும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
இதற்கமைவாக இன்றைய தினத்தில் புதிதாக உறுதி செய்யப்பட்ட மூன்று நோயாளர்கள் யாழ்ப்பாணம் ,மருதானை மற்றும் குருணாகல்லை பிரதேசங்களில் பதிவாகியுள்ளனர்.

126 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா என சந்தேகிக்கப்படும் 231 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில் சீனப் பெண் உட்பட்ட 18 பேர் முழுமையாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.