மட்டக்களப்பில் சிறிய தந்தையால் பாலியல் துஷ்பிரயோகம்; சிறுமி மீட்பு..!

0

சிறிய தந்தையால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது.

சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து அவர்கள் குறித்த சிறுமியின் வீட்டை முற்றுகையிட்டு 8 மாத கர்ப்பமான நிலையில் ஒழிந்திருந்த சிறுமியை மீட்டனர்.

கொழும்பில் இருக்கும் குறித்த சிறுமியின் சிறிய தந்தையின் வீட்டிற்கு தாயாருடன் கடந்த 8 மாதத்திற்கு முன் சிறுமி சென்ற நிலையில் அங்கு சிறிய தந்தையார் மேற்கொண்ட பாலியல் துஷ்பிரயோகம் காரணமாக கர்ப்பணியாகியதால் வீட்டில் ஒழிந்து இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என பொலிசாரின் ஆரம்ப விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து குறித்த சிறுமி சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் ஒப்படைக்கப் பட்டுள்ளதுடன் குறித்த சிறிய தந்தையை கொழும்பில் கைது செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.