இலங்கையில் கொரோணா தொடர்பில் இரண்டாவது இழப்புப் பதிவாகியது..!

0

கொரோனா வைரசு தொற்று நோயாளர்கள் மத்தியில் இலங்கையில் இரண்டாவது உயிர் இழப்பு சற்று முன்னர் நீர்கொழும்பு வைத்திய சாலையில் பதிவாகியிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க உறுதி செய்துள்ளார்.


இவருக்கு 64 வயது. ஆண் நோயாளி. கொச்சிக்கடை பிரதேசத்தை வதிவிடமாக கொண்டவர். இன்றைய தினம் தனியார் வைத்திய சாலையில் இருந்து நீர்கொழும்பு வைத்திய சாலைக்கு மாற்றப்பட்ட இந்த நோயாளி கொரோனா வைரசு தொற்று நோயாளர் என்பது இன்றைய தினமே உறுதி செய்யப்பட்டது.


இதே போன்று இவர் இருதய நோயினால் பீடிக்கப்பட்டிருந்தவர் என்றும் நீண்ட காலமாக சுவாசக் கோளாறினால் அவதிப்பட்டவர் என்றும் மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.