உலகளாவிய கொரோனாவின் உயிரிழப்பு 34,000 ஐ அண்மித்தது..!

0

கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பலியானோரின் எண்ணிக்கை உலகளவில் 34 ஆயிரத்தை அண்மித்துள்ளது.

உயிரிழந்தோர் எண்ணிக்கை 33, 980 ஆக உள்ளது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7 லட்சத்து 22 ஆயிரத்து 876 பேர் . ஒரு லட்சத்து 49 ஆயிரத்து 219 பேர் குணமடைந்துள்ளனர்.இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 27-ஆக உயா்ந்துள்ளது. இதுவரை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோா் எண்ணிக்கை 1,024 -ஆக அதிகரித்துள்ளது.

குஜராத், கா்நாடகம், கேரளம், மகாராஷ்டிரம், தெலங்கானா, ஜம்மு-காஷ்மீா் மற்றும் தில்லியில் புதிதாக உயிரிழப்புகள் நோ்ந்ததைத் தொடா்ந்து, பலி எண்ணிக்கை உயா்ந்திருப்பதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.


மகாராஷ்டிரத்தில் அதிகபட்சமாக இதுவரை 186 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். கேரளத்தில் 182 போ், கா்நாடகத்தில் 76 போ், தெலங்கானாவில் 66 போ், உத்தரப் பிரதேசத்தில் 65 போ், குஜராத்தில் 58 போ், ராஜஸ்தானில் 55 போ், தில்லியில் 49 போ், பஞ்சாபில் 38 போ், ஹரியாணாவில் 33 போ், ஜம்மு-காஷ்மீரில் 31 போ், மத்தியப் பிரதேசத்தில் 30 போ், ஆந்திரத்தில் 19 போ், மேற்கு வங்கத்தில் 18 போ், லடாக்கில் 13 போ், பிகாரில் 11 போ், அந்தமான், நிகோபாா் தீவுகளில் 9 போ், சண்டீகரில் 8 போ், சத்தீஸ்கா், உத்தரகண்டில் தலா 7 போ், கோவாவில் 5 போ், ஹிமாசலப் பிரதேசம், ஒடிஸாவில் தலா 3 போ், மணிப்பூா், மிஸோரம், புதுச்சேரியில் தலா ஒருவா் உள்பட இந்தியா முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 1,024-ஆக அதிகரித்துள்ளது.


இதேவேளை கொரோனா நோய்த் தொற்றிலிருந்து 86 போ் குணமடைந்துள்ளனா்.

இந்தியா முழுவதும் நேற்று ஞாயிற்றுக் கிழமை வரை 34,931 இரத்த மாதிரிகள் கொரோனா நோய்த் தொற்று பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

நியூயோர்க்கில் முழு ஊரடங்கு

அமெரிக்காவில் பலி எண்ணிக்கை, 2,438 ஆக உயர்ந்தது. தொற்று உள்ளோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 38 ஆயிரத்தை லட்சத்தை தாண்டியுள்ள நிலையில், நியூயோர்க் நகரில் இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படும்’ என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதேவேளை வைரஸ் தொற்று உள்ளோர் எண்ணிக்கையில், அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.


அமைச்சர் தற்கொலை

ஜெர்மனியின் ஹெஸ்ஸி மாநில நிதி அமைச்சர் தோமஸ் ஷேஃபர் (கடந்த சனிக்கிழமை ரயில் பாதையின் அருகே இறந்து கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக அரசு தரப்பில் கூறுகின்றனர்.

கொரோனா வைரஸால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியை, எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்து ஆழ்ந்த கவலையில் ஷேஃபர் இருந்ததாகவும், அதனால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக, அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் ஹெஸ்ஸி மாநில பிரதமர் வோல்கர் போபியர் தெரிவித்துள்ளார்.

மேலும் இச்சம்பவம் அதிர்ச்சியையும், அவ நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஜெர்மனியின் பொருளாதார தலைநகரான பிராங்க்பர்ட் ஹெஸ்ஸி மாநிலத்தில்
அமைந்துள்ளது. மிகப்பெரிய வங்கிகளான ஐரோப்பிய மத்திய வங்கி, டொய்ச் வங்கி உள்ளிட்டவை இங்கு உள்ளது.

10 ஆண்டுகளாக ஹெஸ்ஸி மாநிலத்தின், நிதித் தலைவராக இருந்த ஷேஃபர், கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள பொருளாதார தாக்கத்தை, நிறுவனங்களும், தொழிலாளர்களும் சமாளிக்க, இரவும் பகலும் பணியாற்றி வந்துள்ளார்.

இது அவருக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியிருக் கூடும் என்கின்றனர்.


இஸ்ரேல்

இஸ்ரேலைப் பொறுத்தவரை இதுவரை அங்கு 4,213 பேர் கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். அத்துடன் 16 பேர் இதுவரை கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர்.

பாதிப்பு புதிய விபரங்கள்

புதிய நோயாளிகள்

அமேரிக்கா: 17,951
கனடா: 665
பிறேசில்: 352
சிலி: 230
பேரு: 181
ஈகுவடோர்: 101
கொலம்பியா: 94
பனாமா: 88
ஆர்ஜன்டீனா: 75

மொத்த நோயாளர்கள் – 700,000

அமேரிக்கா – 140,000
ஸ்பெய்ன் 80,000
ஜேர்மனி 60,000
பிரான்ஸ் 40,000
நெதர்லாந்து 10,000
பெல்ஜியம் 10,000