பளை பொலிசாரால் 114 கிலோ கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர் கைது..!

0

இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்டு வரமராட்சி கிழக்கில் வைத்து கடத்தப்படவிருந்த 114 கிலோ கேரள கஞ்சாவை மீட்டுள்ள பளைப் பொலிஸார் சந்தேகத்தின் பேரில் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.


கிளிநொச்சி மாவட்டத்தின் பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட கஞ்சா கடத்தப்படுவதாக பளை பொலிஸ் புலனாய்வுப் பிரிவிற்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.


இதனையடுத்து விரைந்து செயற்பட்ட பளை பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று படகில் இருந்த கஞ்சா இறக்கி கடத்த முற்பட்பட்ட போது 114 கிலோ கஞ்சாவை மீட்டதுடன் குறித்த படகையும் சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.


குறித்த சந்தேக நபரை பளை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப் பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.