கோட்டா வழியில் மகிந்தவின் அதிரடி உத்தரவு; அரசியல்வாதிகள் ஈடுபடத் தடை..!

0

தற்போது நாட்டில் நிலவும் கொரோனா சம்மந்தப்பட்ட நிருவாக / நிவாரண விவகாரங்களில் பாராளுமன்ற வேட்பாளர்களோ, அரசியல்வாதிகளோ, மேயர்களோ, தவிசாளர்களோ, உறுப்பினர்களோ அத்துடன் கட்சிகளின் முக்கிய பதவிகளில் உள்ளவர்களோ, ஈடுபட முடியாது.

அத்துடன் உள்ளூராட்சி மன்றங்களின் கடைமைகளை அதிகாரிகள் (ஆணையாளர்கள், செயலாளர்கள் உள்ளிட்ட) செய்ய வேண்டுமே தவிர அரசியல்வாதிகளல்ல எனவும் தடுக்கப்பட்டுள்ளது.


கோத்தாவின் அதிரடி செயற்பாடுகளுக்கு வலுச் சேர்க்கும் வகையில் மகிந்த தேசப்பிரியவின் செயற்பாடுகள் அமைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.