முஸ்லீம்களுக்கு ஒரு நீதி கிறிஸ்தவருக்கு ஒரு நீதியா? பாஸ்ரர் பொலிசாரால் விடுதலை..!

0

வவுனியா வெங்கலச் செட்டிகுளம் முதலியார் குளத்தில் உள்ள வீடொன்றில் மத போதனையில் ஈடுபட்ட பாஸ்ரர் உட்பட 15 பேரை பொலிஸார் இன்று காலை கைது செய்திருந்தனர்.


ஊரடங்கு சட்டத்தின் போது பொது மக்களை ஒன்றாக கூட்ட வேண்டாம் என்ற ஜனாதிபதியின் உத்தரவை மீறி இச் சம்பவம் இடம் பெற்றிருந்தது. எனினும் சற்று முன்னர் குறித்த பாஸ்ரர் செட்டிகுளம் பொலிசாரால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.


இதேவேளை கொரோவப் பொத்தானவில் தொழுகையில் ஈடுபட்ட முஸ்லீம்கள் கைது செய்ப்பட்டுள்ள சூழலில் இவ் விடுதலையானது இனங்களுக்கு இடையில் பாதுகாப்பு தரப்பினர் பாரபட்சமாக நடக்கின்றனர் என்ற குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ளது.


தேவைகளுக்கு ஏற்ப வளையும் இச் சட்டங்கள் தொடர்பில் மக்கள் தமது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.