இலங்கையில் கொரோனா; தொற்றுக்கு உள்ளானோர் எண்ணிக்கை 115 ஆக உயர்வு..!

0

இலங்கையில் மேலும் 2 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங் காணப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 115 ஆக உயர்ந்துள்ள அதேவேளை இதுவரை ஒரு மரணம் சம்பவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழக்கும் நபர்களின் உடல் குடும்பத்திற்கு வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பாதிக்கப்பட்டவரின் இறுதி சடங்குகள் தற்போதுள்ள விதிமுறைகளுக்கு ஏற்ப அரசாங்கத்தால் நடத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.