வவுனியாவில் மத போதனையில் ஈடுபட்ட பாஸ்ரர் உட்பட 15 பேர் சற்று முன்னர் கைது..!

0

வவுனியா வெங்கலச் செட்டிகுளம் முதலியார் குளத்தில் உள்ள வீடொன்றில் மத போதனையில் ஈடுபட்ட பாஸ்ரர் உட்பட 15 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்


ஊரடங்கு சட்டத்தின் போது பொதுமக்களை ஒன்றாக கூட்ட வேண்டாம் என்றும் கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்படும் என்ற அச்சத்திலும் மக்கள் வீடுகளில் தனிமை படுத்தலில் இருந்து வரும் நிலையில் இப்படியான சம்பவங்களும் அங்காங்கே இடம் பெற்று வருகிறது.


இதேவேளை ஏற்கனவே யாழில் ஒரு பாஸ்ரர் செய்த வேலையால் முழு வடக்கே முடங்கியுள்ள நிலையில் இத்தகய செயற்பாடுகள் மக்கள் மத்தியில் விசனங்களை ஏற்படுத்தியுள்ளது.


குறித்த பாஸ்ரரிடம் கடந்த ஒரு சில தினங்களுக்கே முன்பே அறிவுறுத்தல் வழங்கிய போதும் அதனையும் மீறி மத போதனையில் ஈடுபட்டதை தொடர்ந்து செட்டிகுளம் பொலிஸார் குறித்த பாஸ்ரர் மற்றும் 15 பேர்களை கைது செய்துள்ளனர். மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.