இலங்கையின் வடக்கில் மதமாற்றும் கும்பலின் வெறியாட்டம்..!

0

வடகிழக்கில் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட கிராமங்களை சார்ந்தோரின் ஏழ்மையையும், கல்வியறிவு குறைந்தோரை மதம் மாற்றுவதில் புதிய பெயரில் நாளாந்தம் ஒவ்வொரு பணம் படைத்தவரால் உருவாக்கப்படும் சபைகள் களம் இறங்கியுள்ளன.

மட்டக்களப்பிலும் மலையகத்தில் இருந்து யூலை கலவரத்தில் செங்கலடி பிரதேசத்தில் குடியேற்றப்பட்ட மரப்பாலம், புல்லுமலை, உறுகாமம், மற்றும் பாலர்சேனை, தளவாய், களுவண்கேணி போன்று வடக்கிலும் அதிக யுத்த வடுக்களை சந்தித்த வன்னி மாவட்டத்தின் முல்லைத்தீவு, வவுனியா, மன்னாரில் வேகமாக மதம் மாற்றம் செயற்பாடு அதிகரித்துள்ளது,இது தொடர்பில் புத்தி ஜீவிகள் ,ஊடகவியலாளர் என சொல்லபடும் சமூக வழிகாட்டிகள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ இதை விமர்சிக்கவோ, தடுக்கவோ தயங்கும் நிலை காணப்படுகின்றது.

 

இது தொடர்பில் பேசத் தொடங்கினால் தன்னை மதவாதியாக கருதுவார்கள் .அல்லது தமது சக நண்பர்கள் வெறுப்பார்கள் எனும் நிலையால் ஒதுங்கியிருக்கும் நிலையும் காணப்படுகின்றது.


மட்டக்களப்பு, மன்னார், யாழ்ப்பாணம் உட்பட நாட்டின் சகல பகுதிகளிலும் போர்த்துக்கேயர் காலம்தொடக்கம் ஆங்கிலேயர் காலம் வரை கற்றலுக்காகவும், அரச உத்தியோகம் உள்ளிட்ட சலுகைகளுக்காக மதம்மாறி பரம்பரையாக இருந்த கத்தோலிக்க மதத்தை சார்ந்தவரை கூட புதிய சபையினர் சலுகைகளைக் காட்டி மதம் மாற்றியுள்ளனர்.

இன்று தமிழர் தாயகத்தில் இஸ்லாமிய, கிறிஸ்தவர்களால் மதமாற்றமும் அதனைத் தொடர்ந்து இன மாற்றமும் நடக்கின்றது.

இதற்கு சிறந்த உதாரணத்தைக் கூறலாம், அதாவது அரசில் உயர் பதவியில் உள்ள சகோதர கத்தோலிக்க மதத்தைப் பின்பற்றும் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழர் ஒருவரின் மகனுக்கு கபொத சாதாரண பரீட்சையில் ஆங்கில பாடத்தில் A தரச் சித்தியும் தாய் மொழியான தமிழிற்கு W தரச் சித்தியும் கிடைத்தது.

அது மட்டுமன்றி குறித்த சிறுவன் தனது தாய் மொழி தமிழ் எனக் கூற வெட்கப்படுவதாக பாடசாலையில் கூறி சர்ச்சையில் சிக்கிய போதும் பெற்றோர் உயர் பதவியில் இருந்தமையால் மூடி மறைக்கப்பட்டது.


இது மட்டுமல்ல, இந்து சமயத்திலிருந்து மதம் மாறி சபையை பின்பற்றும் ஒரு பெண் அரசியல்வாதியின் பிள்ளைகள் சிங்கள மொழியிலேயே உயர் கல்வியை மேற்கொண்டனர். அவர்களக்கு தமிழே பெரியவில் வராது என்பது வேதனையிலும் வேதனையான விடயம்.

அதாவது முதலில் மதமாற்றம் அதனூடாக தெரிந்தோ, தெரியாமலோ இன மாற்றமே நடக்கின்றது.

விரும்புபவர்கள் விரும்பிய மதத்தை பின்பற்றலாம், அது அவர்களின் மதச் சுதந்திரம். மாறாக வறுமை உள்ளிட்ட பலவீனமான சந்தர்ப்பங்களை பயன்படுத்தி மதம் மாற்றும், மதத் திணிப்பைச் செய்யும் குழுவை விமர்சித்தால் அது கிறிஸ்தவ மதத்தையோ கடவுளை அவமதிப்பதாக சிலர் அர்த்தம் கற்பிக்கின்றார்கள்.

எனினும் இந்துக் கடவுளர்களை சாத்தான் என்று கூறுவதும், மாட்டின் சாணத்தையும், மூத்திரத்தையும் குடிக்கும் முட்டாள்கள் என்று கூறுபவர்களுக்கு கொரோனா வைரசின் ஊடாக தமிழர் மரபும், இந்துக்களின் பண்பாடுமே பாதுகாப்பானது என்று இன்று முழு உலகமும் வியந்து கூறுகின்றது.


தமிழர் பகுதியில் மதங்களிடைய ஒற்றுமை வர வேண்டும் எனில் முதலாவதாக வடகிழக்கு, மலையகத்தில் உள்ள ஆயர்கள், மத போதகர்கள் தங்களது மத பெயரால் புதிய, புதிய சபைகள் ஊடாக மதங்களை மாற்றுவதையும், புதிய புதிய சபைகள் உருவாவதையும் தடை செய்ய வேண்டும், இரண்டாவது சலுகைகள் ஊடான மதப் பரப்பலை நிறுத்த வேண்டும், மாறாக தாமாக விரும்பி மதம் மாறுதல் என்பது தவறு அல்ல.

மாறாக சூழ்நிலைகளை உருவாக்கி மதம் பரப்புதலை மேற்கொண்டால் சமயங்களிடையே வீணாக சந்தேங்கத்துடன் பார்க்கும் சூழ்நிலை உருவாகுவதை தடுக்க முடியாது.

அதேவளை விசுவடுவில் சாத்தானை வீட்டில் வைத்து கொண்டு இருக்க வேண்டாம் என்று கூறி இந்துக்களின் வீடு புகுந்து சுவாமி படங்களை அடித்து நொறுக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அத்துடன் உடனடியாக கிறிஸ்தவ மதத்திற்கு. மாறிவிட வேண்டும் என்று சைவ குடும்பத்தை அச்சுறுத்திய கிறிஸ்தவ பாதிரியார் குழு தொடர்பில் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தவறின் வடகிழக்கு, மலயகத்தில் தமிழர்கள் மத ரீதியாக பிளவுபடக் கூடிய சூழல் ஏற்படுவதை யாராலும் தடுக்க முடியாத நிலை ஏற்படும்.

எனவே மதத்திற்காக மதம் பிடிக்காது தமிழராக ஒன்றுபடுவோம்; தமிழ் தேசியம் காப்போம்.

பகதன்