இலங்கையில் கொரோனாவால் முதல் உயிர் பறிப்பு; பாதிக்கப்பட்டவர்கள் 110 ஆக அதிகரிப்பு..!

0

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நபரொருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

கொழும்பு ஐ.டி.எச் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த 60 வயதுடைய மாரவில பகுதியைச் சேர்ந்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றுக்கு இலக்கான 110 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 9 பேர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தம் காணப்பட்ட மாரவில பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக வைத்திய சாலை வட்டாரம் தெரிவித்துள்ளது.


இந்நிலையில், உலகளாவிய ரீதியில் கொவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 177 நாடுகளில் பரவியுள்ளதுடன் இத் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்தை தாண்டியுள்ளது.

இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளான 9 பேர் குணமடைந்துள்ளனர்.


இதேவேளை உலகளாவிய ரீதியில் 131,826 பேர் குணமடைந்துள்ளதுடன், 27,862 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.