மூன்று மாதங்களுக்கு பாராளுமன்ற தேர்தல் நடைபெற சாத்தியமில்லை..!

0

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பாராளுமன்ற பொதுத் தேர்தல் மூன்று மாதங்கள் வரை ஒத்தி வைக்கப்படும் சாத்தியம் உள்ளதாக அரசாங்கத்தின் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏப்ரல் 25ம் திகதி நாடாளுமன்ற தேர்தல் நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும் தற்போது கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக தேர்தலை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் 3 மாதங்கள் வரை தேர்தலை ஒத்திவைப்பதே சரியான தெரிவு என்ற வகையில் அரசாங்கம் தேர்தலை ஒத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.
இதேவேளை பாராளுமன்ற தேர்தலானது ஆகட்ஸ் மாதம் நடைபெறவுள்ள கபொத உயர்தரப் பரீட்சைக்கு முன்னர் நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.