யாழில் ஊரடங்குச் சட்ட நேரத்தில் நடமாடிய 25 பேர் கைது..!

0

யாழில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ் பொலிஸார் தெரிவித்தனர்.
யாழில் இன்று ஊரடங்கு தளர்த்தப்படாத நிலையில் நகரில் காரணங்கள் எவையுமின்றி குறித்த 25 பேரும் வீதிகளில் நடமாடிய போது பொலிசாரால் கைது செய்யப்பட்டதாக யாழ் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் பயணித்த வாகனங்களும் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

யாழ் தாவடிப் பகுதியில் கொரோனா நோயாளி ஒருவர் இனங் காணப்பட்டதை அடுத்து மீள் அறிவித்தல் வரும் வரை தொடர் ஊரங்கு நடைமுறையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.