யாழில் கொரோனா; சிறுமியின் மருத்துவ அறிக்கை வெளியாகியது..!

0

நேற்றைய தினம் கொரோனா சந்தேகத்தில் யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு கொரோனா தொற்று இல்லை என பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவரது குருதி மாதிரிகள் ஆய்வு கூடப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் எதிர்மறையான அறிக்கை கிடைக்கப் பெற்றுள்ளதாக யாழ் போதனா வைத்திய சாலைப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.


யாழில் இனங் காணப்பட்ட முதலாவது கொரோனா தொற்றுள்ள நபரின் சகோதரியின் மகளான தாவடியைச் சேர்ந்த 4 வயது சிறுமியே இவ்வாறு காய்ச்சல் காரணமாக வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டிருந்தார்.


சிறுமிக்கு வைரஸ் தொற்று அறிகுறிகள் காணப்பட்டதால் அவரது குருதி மாதிரி ஆய்வுகூடப் பரிசோதனைக்காக அநுராதபுர வைத்திய சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.


இந் நிலையில் அந்த ஆய்வுகூடப் பரிசோதனையில் சிறுமிக்கு கோரோனா தொற்று இல்லை என்பது உறுதிப் படுத்தப்பட்டுள்ளது.