தனிமைப்படுதல் முகாம்களில் இருந்து மூன்றாவது குழுவும் வெளியேறியது..!

0

வவுனியா கண்டகாடு, புனாணை, தியதலாவா மற்றும் மியான்குளம் ஆகிய இடங்களில் உள்ள கொரோனா தனிமைப்படுத்தல் நிலையங்களில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவ பரிசோதனையை நிறைவு செய்த சமார் 223 பேரைக் கொண்ட குழுவொன்று இன்று காலை அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


கண்டக்காட்டிலிருந்து 42 பேரும், பூனாணையிலிருந்து 125 பேரும், தியத்தலாவையிலிருந்து 38 பேரும் மியான்குளத்திலிருந்து 18 பேரும் இவ்வாறு விடுவிக்கப்பட்டு, அவர்களது வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு இராணுவத்தினரால் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டன.


இதேபோல், 144 தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் நேற்று காலை தங்கள் வீடுகளுக்கு புறப்பட்டு செல்வதற்கு இராணுவத்தால் பேருந்துகள் மற்றும் லொறிகள் வழங்கப்பட்டன.


46 தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் உள்ள 31 வெளிநாட்டினர் உட்பட மொத்தம் மூவாயிரத்துக்கு மேற்பட்ட நபர்கள் தனிமைப்படுத்தலில் உள்ளனர்.


(மார்ச் 1-15) காலப்பகுதியில் நாடு திரும்பிய 20,000 பேர்களில் அடையாளம் காணப்பட்டவர்கள் உட்பட சுமார் 7500 நபர்கள் இன்னும் சுய தனிமைப்படுத்தலில் அல்லது தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளதாக கொவிட் பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு தலைமை அதிகாரியும், இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.