கொரொனா மனிதாபிமான உதவியில் இறங்கிய மட்டு குருக்கள் மடம் முருகன்..!

0

கிழக்கின் பிரபல முருகன் ஆலயங்களில் ஒன்றான குருக்கள் மடம் ஸ்ரீ முருகன் ஆலயம் தற்போது நாட்டிலுள்ள ஏற்பட்டுள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உதவ முன்வந்துள்ளமை பாரட்டத்தக்கதாகும்.

இலங்கையை தற்போது பீதியில் உறைய வைத்துள்ள தொற்று நோயான கொரோனா வைரஸ் பொதுமக்களை வீடுகளில் முடக்கியுள்ளது.இதனால் கூலித் தொழிலாளிகள் உட்பட பொதுமக்கள் ஊரடங்கு நீடிக்கப்பட்டு வருவதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது சகோதர கிறிஸ்தவ, முஸ்லீம், சிங்கள மக்களிற்கு அவர்களின் அவர்களின் பள்ளிவாசல், விகாரை, தேவாலயங்கள் ஓரளவு உதவிகளை வழங்கி வருகின்றது.

எனினும் புராதன இந்துக்கள், சைவர்கள் என தம்பட்டமடிக்கும் நாம் வங்கிகளில் கோடிகளில் பணத்தை சேமித்து இருக்கின்றோம்.


புராதன காலத்தில் வங்கிகளாகவும், தர்ம சத்திரங்களாகவும் விளங்கிய கோவில்களில் இன்று பணச் சேகரிப்பு மட்டுமே நடைபெறுகின்றது.

இது தமிழரிடையே தொடர்ந்தும் ஏக்கத்தையும், விமர்சனத்தையும் ஏற்படுத்தி வருகின்றது.

” எங்களது வசதி கூடிய ஆலயங்கள் கும்பாசேகம் ,திருவிழா போது காட்டும் அக்கறையை அதன் பிறகு அந்த ஆலயத்தை சூழவுள்ள கிராமங்களில் வாழும் மக்களின் அடிப்படை அவசியமான வாழ்வதார பிரச்சினைகளின் போது காட்டுவதில்லை எனும் குறைபாடு தொடர்ச்சியாக காணப்படுகின்றது.


இத்தகய நிறுவன ரீதியற்ற செயற்பாடுகள் காரணமாக ஏழை மக்கள் ஒரு வகையில் மதம்மாறிச் செல்வதை ஊக்குவிக்கின்றது.

நேற்று கூட மண்டூர் பகுதியில் சென்ற போது நகரத்தில் உதவிகள் கிடைப்பது போன்று பொது மக்களுக்கு உதவி செய்பவர்களை காண முடியவில்லை .


பல இடங்களில் மாஸ்க் வகைகளையும், உணவுப் பொருட்களை பள்ளிவாசல்கள் அங்குள்ள மக்களுக்கு வழங்குகின்றார்கள்.

இந் நிலையில் சிறிய ஆலயத்தின் செயற்பாடு அனைத்து இந்து ஆலயங்களையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

ஊரிலிருக்கும் பெரிய பெரிய கோயில்களில் எல்லாம் பெரிய கட்டடங்களை கட்டி ஒரு தொகையை பைகளில் போட்டுச் செல்வதை விடுத்து களத்தில் இறங்கினால் தானாகவே மதம் மாற்றும் மோசடி கும்பல்கள் தலை வைத்து பார்க்காது.


இத்தகய முன்மாதிரியான செயலில் இறங்கிய மட்டு குருக்கள்மடம் ஸ்ரீமுருகன் ஆலய நிர்வாகத்தினருக்கும் கிராம மக்களுக்கும் தமிழ்பொறி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றது.