இலங்கையின் எப் பகுதியிலும் இன்று கொரோனா நோயாளர் இனங் காணப்படவில்லை..!

0

நாட்டின் எந்தப் பகுதியிலும் இன்று எந்தவொரு கொரோனா தொற்று நோயாளரும் இனங் காணப்படவில்லை என அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.


இந்த வைரஸ் பரவலை தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துள்ளது.

மக்கள் தமது பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்றினால் அரசாங்கத்தின் வேலைத் திட்டம் வெற்றி பெறும் என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.


இலங்கையில் இதுவரை 102 கொரோனா நோயாளர்கள் இனங்காணப் பட்டுள்ளார்கள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.


வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 225 பேர் வைத்திய சாலைகளில் சிகிச்சை பெறுகிறார்கள்.