இரவு பகலாக போராடும் மருத்துவர்களின் சிரமத்தில் பங்கேற்ற இளைஞர்கள்..!

0

கொரோனா வைரசுக்கு எதிராக தொடர்ச்சியாக இரவு பகலாக போராடி வரும் மருத்துவர்களின் சிரமத்தில் சில இந்திய இளைஞர்கள் பங்கேற்றுள்ளனர்.


Sartrouville (Yvelines) நகரில் வசிக்கும் சில இளைஞர்கள் இணைந்து இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னதாக 2019 ஆம் ஆண்டு நாட்டினை தூய்மைப்படுத்தும் நடவடிக்கை சிலவற்றில் ஈடுபட்ட இவர்கள், இம்முறை கொரோனா வைரசுக்கு எதிராக களம் இறங்கியுள்ளனர்.


இவர்கள் நகர கட்டிடங்கள், மண்டபங்களை சுத்தப்படுத்தும் செயலில் ஈடுபட்டதோடு, பொதி செய்யப்பட்ட உணவுகளை இலவசமாக மருத்துவர்களுக்கு வழங்கினர்.

pizzas, burgers, sushi, kebabs, galettes des rois, உள்ளிட்ட உணவுகளோடு, குளிர்பானங்களையும் அவர்களுக்கு வழங்கினார்கள். மருத்துவர்கள், மருத்துவ உதவியாளர்கள் மற்றும் தாதியர்களுக்கு இந்த உணவுப்பொதி வழங்கப்பட்டது.


#labanlieueaducoeur எனும் குறியீட்டு வார்த்தையை பயன்படுத்தி நாட்டில் உள்ள அனைவரையும் இந்த நிகழ்வில் பங்கேற்கும் படி அழைப்பு விடுத்துள்ளனர்.