தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம்; 18 பேர் பாதிப்பு..!

0

தமிழகத்தில் மேலும் மூவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் புதிதாக மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நியூஸிலாந்தில் இருந்து திரும்பிய 65 வயதுமிக்க ஆண் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த 55 வயது மிக்க பெண் கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

லண்டனில் இருந்து திரும்பிய 25 வயது இளைஞர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர்கள் மூவரும் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.

தற்போது தமிழகத்தில் கொரோனா வைரசினால் பாதித்தோரின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.