யாழ் மதபோதகரின் மனைவியால் 214 பேர் தனிமைப் படுத்தப்பட்டனர்..!

0

யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 214 பேருக்கு வைரஸ் தொற்றிருக்கலாம் என்ற சந்தேகிக்கப்படுகின்றது.


இதனடிப்படையில் குறித்த நபர்கள் தனிமைப்படுத்தப் பட்டிருப்பதாக யாழ்.மாவட்ட செயலர் க.மகேஸன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.


சுவிஸ் நாட்டிலிருந்து மதபோதகரை யாழ்ப்பாணம் அழைத்த யாழ்ப்பாணத்தில் உள்ள மதபோதகரின் மனைவி சமுர்த்தி உத்தியோகத்தராக பணியாற்றுகின்றார்.

இந் நிலையில், அவர் 214 சமுர்த்தி பயனாளிகளுக்கு சமுர்த்தி கொடுப்பனவினை அண்மையில் வழங்கியுள்ளார்.


இதனையடுத்து குறித்த 214 பேரும் தற்போது தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட செயலர் மகேசன் மேலும் தெரிவித்துள்ளார்.