சீனாவில் கொரோனாவை பின்தள்ளி புதிய ஹண்டா வைரஸ்; ஒருவர் பலி..!

1

கடந்த ஆண்டு, சிலி மற்றும் அர்ஜெண்டினா போன்ற நாடுகளில் எலியின் மூலம் ஹண்டா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவதாக செய்திகள் வெளியாகியிருந்தது. இந்த வைரஸ் தாக்குதலில் சிலியில் 10க்கும் மேற்பட்டோர் பலியானதாகவும் கூறப்பட்டது.


எனினும், கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தாக்கம், ஏனைய வைரஸ் தொடர்பான நோய்களை பின்னுக்கு தள்ளியது.

இந்த நிலையில், தற்போது சீனாவில், ஹண்டா வைரஸ் தீவிரமாகப் பரவி வருகிறது. இது அந்நாட்டு மக்களிடையே பீ தியை ஏற்படுத்தி உள்ளது.


இந்த வைரஸ் குறித்து தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள மருத்துவர்கள்,

எலியில் இருந்து மனிதர்களுக்கு பரவும் இந்த வைரஸ் தாக்குதலுக்கு விவசாயிகளே அதிகளவில் பாதிக்கப்படுவார்கள் என்றும் ஹண்டா வைரஸ் தாக்குதல் உடலில் ஏற்பட்டால்,

பாதிக்கப்பட்ட நபர்களுக்கு. காய்ச்சல், வறட்டு இருமல், தலைவலி ஏற்படும் பின் சுவாசக் கோளாறு இரத்தப் போக்கு ஏற்படும்,


இதையடுத்து, உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பாக செயலிழந்து மரணம் சம்பவிக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.

கொரோனா தற்போதுதான் சீனாவில் குறைவடைந்து வரும் நிலையில், அங்கு தற்போது ஹண்டா வைரஸ் பரவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


இது மனிதனிடம் இருந்து மற்றொரு மனிதனுக்கு பரவாது என்பது சற்று ஆறுதலான விஷயம்.