சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று – 7 பேர் பலி; 78 பேர் பாதிப்பு..!

0

உலகளவில் கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 16,510 ஆக உயர்ந்து உள்ளது. இந்தியாவில் இதுவரை 476 பேரும் இலங்கையில் இதுவரை 100 பேரும் பாதிக்கப்பட்டுள்னர்.

சீனாவில் மீண்டும் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனாவின் பிறப்பிடமான சீனாவில் கடந்த சில நாட்களாக அந்த வைரசின் தாக்கம் தணிந்து இருந்தது.


குறிப்பாக கொரோனா கண்டறிப்பட்ட உகான் நகரில் கடந்த 6 நாட்களாக யாருக்கும் புதிதாக தொற்று ஏற்படவில்லை.

இந்த நிலையில் சீனாவில் புதிதாக 78 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் 7 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.


இந்த ஏழு மரணமும் ஹூபே மாகாணத்தில் தான் என தெரிய வந்துள்ளது. இதில் 74 பேர் வெளிநாட்டில் இருந்து சீனாவுக்கு திரும்பியவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி மொத்தமாக சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 81,171 ஆக உயர்ந்து உள்ளது.


இதில் 73159 பேர் மருத்துவமனையிலிருந்து வெளியேறியுள்ளதோடு மொத்தமாக 3277 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிய வந்துள்ளது.

சீனாவில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருந்தவர்களில் 90 சதவீதம் பேர் குணமடைந்து வீடு திரும்பியதாக சீன தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.


இதேவேளை ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் தாக்கம் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.