கொரோனா குழப்பத்தின் மத்தியிலும் விமானத் தளபதியை ஆளுனராக நியமித்த கோட்டா..!

0

முன்னாள் விமானப் படைத் தளபதி ரொஷான் குணதிலக சற்று முன்னர் மேல் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.


கொனோனா தொடர்பான சர்வ கட்சி குழுக் கூட்டம் பிரதமர் தலைமையில் ஒருபுறம் நடைபெற்றுக் கொண்டிருக்க மறுபுறம் பாதுகாப்பு தரப்பினரை உயர் பதவிக்கு நியமித்துள்ளார் ஜனாதிபதி கோட்டபாய.


ஏற்கனவே இலங்கை வங்கியின் பணிப்பாளராக இராணுவ அதிகாரி நியமிக்கப்பட்டதால், ஊழியர்கள் கறுப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபடும் நிலையில் குழப்பங்களை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி இத்தகய பல நியமனங்களை வழங்கி வருகின்றார்.


ஒரு ஜனநாயக நாட்டில் இத்தகய நியமனங்கள் ஜனநாயகத்தின் சுயாதீனத்தையே கேள்விக்கு உட்படுத்துவதாக அமையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.