இலங்கையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 99 ஆக உயர்வு..!

0

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 99 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.


இன்று காலை இருவர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிப் படுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

அதற்கமைய பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 97 இலிருந்து 99 ஆக உயர்ந்துள்ளது எனவும் அவர் கூறினார்.


இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களில் இருவர் ஏற்கனவே குணமடைந்து தமது வீடுகளுக்குச் சென்றுள்ளனர் எனவும், 97 பேர் வைத்திய சாலைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.