முதலாவது தனிமைப்படுத்தல் குழுவினர் பரிசோதனையின் பின்னர் வெளியேற்றம்..!

0

வெளிநாடுகளில் இருந்து வருகை தந்த நிலையில் , தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த முதலாவது குழுவினர் இன்று வெளியேற்றப்பட்டுள்ளனர்.


இத்தாலி , ஈரான் மற்றும் தென்கொரியா போன்ற நாடுகளில் இருந்து வருகை தந்த 311 பேர் இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


இதற்கமைய ஜனாதிபதியின் ஆலோசனையின் பிரகாரம் இறுதி மருத்துவ பரிசோதனையின் பின்னர் அவர்கள் விடுவிக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


புனானை தனிமைப்படுத்தல் தங்க வைக்கப்பட்டிருந்த 203 பேரும் , கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த 108 பேர் இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர்.