கொழும்பு தேசிய மருத்துவமனை மருத்துவர்கள் மீது முஸ்லீம் நபர் தாக்குதல் முயற்சி..!

0

கொழும்பு தேசிய மருத்துவமனையில் முஸ்லிம் நபர் ஒருவர் மருத்துவர்கள் மீது தாக்குதல் முயற்சி மேற்கொண்டதாக கூறப்படுகின்றது.


கொழும்பு, வெல்லம்பிட்டிய சேதவத்த பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு தாக்குதல் நடத்த முயற்சி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் சுகயீனம் காரணமாக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


இந்நிலையில் அவரது உமிழ் நீரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், கொரோனாவிற்கான அறிகுறிகள் இருப்பதாகத் தெரிவித்து அவரிடம் விசாரணைகளை நடத்தியுள்ளனர்.

இதன் போது அவரது மகன் அண்மையில் அமெரிக்காவிலிருந்து வந்ததை பல தடவை நடத்தப்பட்ட விசாரணையின் இறுதியில்தான் அந்த நபர் கூறியுள்ளார்.


இதனிடையே அமெரிக்காவிலிருந்து வந்த அவருடைய மகன் மருத்துவமனைக்கு வந்த போதே மருத்துவர்கள் மீது மேற்படி தாக்குதல் முயற்சி இடம் பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.