இன்று கொரோனா தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு பிரதமர் அழைப்பு..!

0

கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்வதற்காக இன்று (24) பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சி தலைவர்களுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.


இலங்கையில் கொவிட் -19 வைரஸ் பரவலின் தற்போதைய நிலை தொடர்பில் கலந்துரையாட அவர் இந்த அழைப்பினை மேற்கொண்டுள்ளார்.


அதன்படி, இன்று காலை 10 மணிக்கு அலரி மாளிகையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.