யாழிற்கே சங்கு ஊதிய சுவிஸ் போதகரின் லீலைகள் அம்பலம்…!

0

யாழிற்கும், ஒட்டுமொத்த வடக்கிற்கும் கொரோனா வைரசை ஏந்தி வந்து பிரச்சாரம் என்ற பேரில் ஒவ்வொருவரிடமும் பணம் கறந்து சென்ற சுவிட்சர்லாந்தில் வாழும் கிறிஸ்தவ போதகர் மற்றும் அவருடன் கலந்து கொண்டோர் பற்றிய தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

குறித்த மதபோதகரின் பெயர் போல் சட்குணராசா எனவும், யாழ்ப்பாணம் அரியாலையில் அமைந்துள்ள பிடெல்பியா தேவாலயத்தில் அவர் ஆராதனை நடாத்தினார் எனவும் தெரிய வருவதுடன், குறித்த தேவாராதனையில் 500 பேரளவில் கலந்து கொண்டதாகத் தெரிகின்றது.


வந்திருந்தவர்களில் பெரும்பாலானோரை அவர் முத்தமிட்டிருக்கின்றார். தற்போது பொலிஸார் ஆராதனைக்குச் சமுகமளித்தோரை வலை வீசித் தேடிக் கொண்டிருக்கின்றனர். பல இளம் யுவதிகள் தலை மறைவாகியுள்ளனர்.

சட்குணராசா தான் ஆரம்பத்தில் நாஸ்திகனாக இருந்ததாகவும், பின்னர் கடவுள் கடாட்சத்தால் தான் கிறிஸ்தவ சமயத்தில் இணைந்ததாகவும் தன் வாழ் நாளை கடவுளுக்காகத் தியாகம் செய்வதாகவும் பல நிகழ்வுகளில் குறிப்பிட்டுள்ளார்.


இவரின் ஏமாற்றுத்தனத்தை, பாமர மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் தனத்தை சுவிஸ் தொலைக்காட்சியொன்று புட்டுப்புட்டாய் ஒலி-ஔிபரப்பியுள்ளது.

அந்தத் தொலைக்காட்சியில் வௌிவந்த விடயங்கள் பற்றி தமிழ் இணையத்தளம் ஒன்றும் செய்தி வௌியிட்டுள்ளது.


சுவிஸில் தேவாராதனை என்ற பேரில் விண்ணப்பப் படிவங்களை அச்சிட்டு வௌியிட்டு, சுவிஸ் மக்களிடம் சந்தாப் பணம் அறவிடுவதாகவும், குறித்த நேரத்தில் சந்தாப் பணம் செலுத்தாவர்களை தேவனின் கடுங்கோபத்திற்கு ஆளாக வேண்டி ஏற்படும் எனவும் பயமுறுத்தி, அவர்களைத் தன்கால்களில் விழ வைக்கும் கைங்கரியத்தில் சட்குணராசா சாமர்த்தியனாக இருப்பதாகவும், பெரும்பாலும் தேவ ஆசி என்று அவரால் பொய்யே கட்ட விழ்த்து விடப்படுவதாகவும், இவர் போன்றவர்களால் கிறிஸ்தவ சமயத்திற்கே இழுக்கு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அத்துடன் வாழ்நாளில் வேலைக்கு சென்றிடாத குறித்த நபரிடம் 160 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்கள் இருப்பதாகவும், யாழில் இரண்டு மாளிகைகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எதுஎவ்வாறாயினும் சட்குணராசாவின் ஏமாற்றுத்தனத்திற்கு யாழ் மக்களிற் சிலரும் பலிக்கடாக்களாக மாறியுள்ளார்கள்.


அதன் பெறுபேறாக ஒட்டு மொத்த வடக்கு மாகாணமே முடக்கப்பட்டுள்ளளதுடன் குறித்த ஆராதனைக்கு வடக்கின் ஐந்து மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.