நகரசபை தலைவரின் அதிரடி; கொரோனாவை தடுக்க தொடர் சுத்திகரிப்பு நடவடிக்கை..!

0

வவுனியா நகரசபை தலைவரின் உத்தரவுக்கமைய வவுனியா நகரம் தொடர்ச்சியாக தினமும் சுத்தம் செய்யப்பட்டு வருகின்றது.

தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையை தொடர்ந்து, வட மாகாணம் முழுவதும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு, வடக்குக்கான போக்குவரத்து வீதிகளும் தடை செய்யப்பட்டுள்ளது.

இந் நிலையில் கொரோனா வைரஸ் நோயினை கட்டுப்படுத்தும் நோக்கில் வவுனியா நகர சபை தவிசாளர் இராசலிங்கம் கெளதமன் அவர்களின் நேரடி வழிகாட்டலில் நகரை சுத்திகரிக்கும் செயற்பாடு இடம் பெற்றுள்ளது.

நாளைய தினம் காலை 6 மணி தொடக்கம் 12 மிவை ஊரடங்கு நீக்கப்படு்ம் போது அதிகளவான மக்கள் நகரை நோக்கி வரக்கூடும்.

எனவே மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இன்றைய தினம் வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகள் நகரசபை சுத்திகரிப்பு தொழிலாளர்களால் சுத்தம் செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.