இலங்கையின் இரண்டாவது கொரோனா நோயாளியின் தற்போதய நிலை வெளியாகியது..!

0

இலங்கையில் இரண்டாவது கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்றாளியாகவும் முதலாவது இலங்கையராகவும் அடையாளம் காணப்பட்ட இலங்கையர் முழுமையாக குணமடைந்துள்ளார்.

குறித்த நபர் இத்தாலியை சேர்ந்த சுற்றுலாப் பயணிகளின் வழிகாட்டியாக செயற்பட்ட அவர் கடந்த இரு வாரத்திற்கு முன்பு கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சைக்காக ஐ.டி.எச். வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அவருக்கு வழங்கப்பட்ட முறையான சிகிச்சகைளின் பின் அவர் பூரணமாக குணமடைந்து வைத்திய சாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக வைத்திய சாலை வட்டாரம் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 

கொழும்பை சேர்ந்த இவர் சுற்றுலா வழிகாட்டியாக செயற்பட்ட போது வைரஸ் தொற்றுக்கு உள்ளானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.