மக்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவுகளை கிராம சேவகர்களூடாக வழங்க ஏற்பாடு..!

0

கொரோனா வைரஸ் தொற்றும் அபாயம் காரணமாக அரசாங்கத்தினால் வயோதிபர்கள் மற்றும் விசேட தேவையுடையவர்களுக்கும், மருத்துவ உதவிகளுக்காக வழங்கப்படும் மாதந்த கொடுப்பனவினை வழங்க மாற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, உயர்கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன முன்வைத்த யோசனைக்கு அமைய மார்ச் மாதத்திற்கான கொடுப்பனவினை அனைத்து கிராம சேவகர் பிரிவின் ஊடாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொரேனா வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில் வயோதிபர்களை ஒன்று கூட்டுவது பொருத்தமற்றது என்பதால் கிராம சேவகர் பிரிவின் ஊடாக குறித்த கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் தெரிவித்துள்ளார். மாத கொடுப்பனவுகளை பெறுபவர்கள் அரசாங்கம் விடுத்துள்ள சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுவதுடன் கிராம சேவகரை சந்திப்பதற்கு முன்னர் அதற்கான நேரத்தை முன் கூட்டியே ஒதுக்கிக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.