நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 1754 கைது; வாகனங்களும் பறிமுதல்..!

0

நாடளாவிய ரீதியில் கடந்த வெள்ளியன்று மாலை பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு சட்டத்தை மீறிய 1754 பேர் இன்று காலை 6.00 மணி வரையிலான 60 மணி நேர காலப் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சர் சட்டத்தரணி ஜாலிய சேனாரத்ன கூறினார்.


அத்துடன் சந்தேக நபர்களுக்கு மேலதிகமாக மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் உட்பட 447 வாகனங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


இதேவேளை இது தொடர்பில் கடுமையான எச்சரிக்கை முன்னரே வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.