தாமாக கண்காணிப்பிற்கு முன்வர இரண்டு நாள்; கைது செய்யப்பட்டால் 3 வருடம் சிறை..!

0

வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பி வந்து கொரோனா மருத்துவ கண்காணிப்பிற்கு உட்படாமல் இருப்பவர்கள் தாமாக மருத்துவ கண்காணிப்பிற்கு முன்வருவதற்கு 48 மணித்தியாலங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.


இதற்கு முன்வராது ஒழித்து இருப்பவர்கள் பாதுகாப்பு துறையினரால் இணங் காணப்பட்டால் 3 வருட கட்டாய சிறை தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதற்கமைய வெளிநாடுகளிலிருந்து வருகை தந்தவர்கள் நாளை மறுதினம் 24 ஆம் திகதி செவ்வாய்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு முன்னர் பிரதேச பொது சுகாதார பரிசோதகர்கள் அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகுமாறு கோரப்பட்டுள்ளது.