அரசின் ஊரடங்குச் சட்டத்தினால் கொரோனா பீடிப்பு மட்டம் வீழ்ச்சி..!

0

பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப் பட்டமையால் இந்நாட்டில் கொரோனா வைரசு தாக்கத்திற்கு உள்ளானவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.


தற்போது கொரோனா தொற்றுக்குள்ளான 77 பேர் வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும், அதில் இருவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


இன்று கொரோனா நோயாளியாக ஒருவர் மட்டுமே பதிவாகியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை யாழில் சுவிஸ் மத போதகரின் செயற்பாட்டால் பாரிய மனிதப் பேரவலம் ஒன்று ஏற்படக் கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.