கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் ஊரடங்கு அமுல் படுத்தப்பட்டுள்ள இந்த காலப் பகுதியில், பொது மக்களிற்கு அசௌகரியத்தை ஏற்படுத்தாத விதமாக,
மின் கட்டணம் செலுத்த வேண்டிய அவகாசத்தை நீடிக்கும் படி மின்சக்தி, எரிபொருள் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர, சம்மந்தப்பட்ட அதிகாரிகளிற்கு உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி, எதிர்வரும் 31ம் திகதி வரை மின் கட்டணத்தை செலுத்துவதற்கான அவகாசமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் காலப்பகுதிக்குள் மின் துண்டிப்பை மேற்கொள்ளக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளார்.