கொரோனாவில் இருந்து உலக மக்கள் நலம் பெற திருக்கேதீஸ் வரத்தில் மகா யாகம்..!

0

கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து உலக மக்கள் நலம் பெற வேண்டி மன்னார் மாவட்டத்தில் மிகப் புராதன தலமான திருக்கேதீஸ்வர ஆலயத்தில் மகா யாகம் ஆலய திருப்பணிச் சபையின் ஏற்பாட்டில் நேற்று சனிக்கிழமை 21-03-2020 காலை இடம் பெற்றது.


வேகமாக பரவி வரும் கொரோனா வைரசின் தாக்கத்தனை முடிவுறுத்தி உலக மக்கள் நலம் பெற பிராத்திக்கும் வண்ணம் உலக நாயகனாக வைத்திய நாதனாக கௌரி அம்பிகையுடன் வீற்றிருக்கின்ற திருக்கேதீச்சர நாதர் திருக்கோயில் சனிப் பிரதோச நாளான நேற்று சனிக்கிழமை (21) காலை 9.30 மணி தொடக்கம் மதியம் 12 மணி வரை குறித்த மகா யாகம் இடம் பெற்றது.


ஆலய திருப்பணிச் சபையினரின் ஏற்பாட்டில் இடம் பெற்ற குறித்த மஹா யாகத்தின் போது உலக மக்கள் நலன் பெற வேண்டி பிராத்தனைகள் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.


இதேவேளை இந் நிகழ்வில் கலந்து கொள்ள பொது மக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பதுடன் திட்டமிட்டபடி சகல ஆலயங்களிலும் நித்திய கிரியைகள் இடம்பெற்று வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.