வெளிநாட்டுப் பயணிகளுடன் வடக்கை நோக்கி நகரும் கொரோனா சந்தேக நபர்கள்..!

0

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகைத் தந்த பயணிகளை கொரோனா தொற்று ஆய்வுக்கு உட்படுத்தும் நடவடிக்கைக்காக வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு இன்று (22) காலை 9.00 மணியளவில் அழைத்து செல்லப்பட்டனர்.

பொலிஸ் மற்றும் இரானுவத்தினரின் பாதுகாப்புடன் 8 பேரூந்துகளில கொரோனா தொற்று ஆய்வுக்கு உட்படுத்தும் நடவடிக்கைக்காக 100க்கு மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்படுவதுடன் இரண்டு லொறிகளில் அவர்களின் பொருட்களும் எடுத்துச் செல்லப்படுகின்றது.

குறித்த வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்கள் கிளிநொச்சி , முல்லைத்தீவு மற்றும் சாவகச்சேரிப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தொற்று நோய் ஆய்வு நிலையத்திற்கு அழைத்து செல்லப்படுவதாக தெரிய வருகின்றது.