தேவாலய ஆராதனையில் கலந்து கொண்ட ஐவர் வைத்திய சாலையில் அனுமதி..!

0

யாழ்.செம்மணி தேவாலயத்தில் ஆராதனையில் கலந்து கொண்ட நிலையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் 5 போ் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.


வைத்திய சாலையின் பணிப்பாளா் த.சத்தியமூா்த்தி, ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டிருப்பதை உறுதி செய்துள்ளதுடன், அவா்களுடைய இரத்த மாதிாிகள் பாிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


நாளை காலையே குறித்த பாிசோதனையின் அறிக்கை வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.