அனுராதபுரம் சிறைச் சாலையில் கலவரம்; மூவர் பலி?

0



அனுராதபுரம் சிறைச் சாலையில் இன்று பகல் இடம்பெற்ற கலவரத்தை அடுத்து, மூவர் பலியாகியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

சிறைச்சாலையில் கொரனா காய்ச்சல் என்ற சந்தேகத்தில் 4 பேரை அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

இதன் காரணமாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள் கைதிகள் சிறை உடைப்பு முயற்சி மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக அநுராதபுர சிறைச்சாலையில், சற்றுப் பதற்றமான நிலை நிலவுவதாகவும். அரசியல் கைதிகளின் சிறையையும் ஆயுள் கைதிகள் உடைத்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.



எனினும் குறித்த செய்தியை உறுதிப்படுத்த முடியவில்லை, மேலதிக தகவல்களை விரைவில் எதிர்பாருங்கள்.