தேசியத் தலைவரின் வழியில் செயல் வீரர்களுக்கு களமமைத்த விக்கியின் மக்கள் கூட்டணி..!

0

இம்முறை நடைபெறவுள்ள பாரராளுமனற தேர்தலில் அதிகளவு முன்னாள் போராளிகளையும், தமிழ்த் தேசிய ஆதரவாளர்களையும் தமிழ் தேசிய மக்கள் கூட்டணி களமிறக்கி அரசியலில் புதிய அத்தியாயத்தில் கால்பதித்துள்ளது.


கடந்த காலங்களில் தமிழ் தேசிய அரசியலில் தமிழ் மக்களுக்கான போராட்டத்தில் பங்கெடுத்த முன்னாள் போராளிகளை தமிழ் தேசிய கூட்டமைப்பும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் புறக்கணித்து வந்தன.

தேர்தலுக்கும், பதவிக்கும் தமிழர் போராட்டமும், விடுதலைப் புலிகளும் வெற்றுக் கோசங்களாக பயன்படுத்தி தாயகத்தில் வாக்குகளையும், புலத்தில் அனுதாபத்தினூடாக பணத்தையும் சேகரித்து தமது பைகளை நிரப்பும் கீழ்த்தரமான வேலைகளையே குறித்த இரு கட்சிகளும் செய்தன, இன்றும் செய்து வருகின்றன.


தமிழர் விடுதலைக்காக தமது உயிரையே துச்சமென நினைத்துப் போராடிய போராளிகளையும், தமிழ் தேசிய சமூக ஆர்வலர்களையும் பாராளுமன்றம் அனுப்ப வேண்டும் என்பதற்காக பல போராளிகளை முதன்மை வேட்பாளர்காகவும், தேசியப் பட்டியலூடாகவும் பாராளுமன்றம் அனுப்ப வேண்டும் என்ற நோக்கில் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தனது கட்சியின் ஊடாக களம் அமைத்துக் கொடுத்துள்ளார்.

அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தின் போது தனது அவயவம் ஒன்றை இழந்த முன்னாள் போராளி வாமதேவன் சுசாந்தன் என்பவரை தமிழ் மக்கள் தேசிய கூட்டணி சார்பில் களம் இறக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் மன்னார் மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் மூத்த தளபதியான விக்ரரின் சகோதரி மாலினி அவர்கள் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஊடாக களமிறங்கியுள்ளார். இவர் முன்னாள் மடு வலய கல்விப் பணிப்பாளர் ஆவார்.


இதேவேளை வன்னி மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளியான முன்னாள் பெண் போராளி ஜெஸ்மின் கிளெறிஸ் பரமநாதன் என்பவரை தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தேசிய பட்டியலில் உள்ளடக்கியுள்ளார். சிறந்த சமூக சேவையாளருமாவார்.

இவருடன் பொருளியல் துறை பேராசிரியர் சிவநாதன் மற்றும் வல்வெட்டித் துறையை சேர்ந்த மிக நீண்ட காலமாக தமிழ் தேசியத்திற்காக பணியாற்றி வருபவரும் தமிழ் மக்களின் போராட்டம் தொடர்பில் ஆங்கிலத்தில் பல வெளியீடுகளை செய்திருப்பவருமான செல்வேந்திராவும் களமிறங்கியுள்ளார்.

அத்துடன் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளராக கூட்டமைப்பின் தலைவரையே திருகோணமலையில் அரசியலில் உருவாக்கியவம், விடுதலைப் புலிகளின் அரசியல் பொறுப்பாளாகவும், தமிழீழ பொருண்மிய நிறுவனப் பொறுப்பாளராகவும் விளங்கிய ரூபன் மாமா என அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் ஆத்மலிங்கம் ரவீந்திராவும் களமிறங்கியுள்ளார்.


இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் மக்களின் மனங்களையும், தமிழீழத் தேசியத் தலைவராலும், போராளிகளாலும் மதிக்கப்பட்ட ஆசிரியர் கந்தையா இரத்னகுமாரும் களமிறங்குகின்றனர்.

அதேவேளை யாழ் மாவட்டத்தில் முதன்மை வேட்பாளராக விக்னேஸ்வரனும், தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதிகளில் ஒருவரான எழிலனின் மனைவி அனந்தி சசிதரனும், தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரனின் உறவினருமான சிவாஜிலிங்கமும் போட்டியிடுகின்றனர்.


ஆக இம்முறை தேர்தலில் தமி்ழ் தேசிய கட்சிகள் என்று தம்பட்டம் அடிக்கும் கட்சிகள் முழுமையாக முன்னாள் போராளிகளை புறக்கணித்த நிலையில் மாற்றத்திற்கான அரசியலை முன்னெடுத்துள்ள விக்னேஸ்வரனின் கரங்களை ஈழத் தமிழர்களும், தமிழ் தேசியத்தை உயிரிலும் மேலாக சுவாசிக்கும் புலம்பெயர் உறவுகளும் பலப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம் என்பதை உணர்ந்து மீனுக்கு வாக்களித்து மாற்றத்தை உருவாக்க ஒன்றிணைவோம்.