இலங்கையில் கொரோனா தொற்று 72; இருவரின் உடல் நிலை மோசம்..!

0

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் இருவரின் உடல் நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


குறித்த இருவருக்கும் கொரோனா தொற்றினை அடுத்து நியுமோனியா தாக்கம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் இவர்கள் எவ்வேளையிலும் சுயநினைவை இழக்கும் நிலை ஏற்படலாம்.


நேற்றைய தினம் இலங்கையில் 13 கொரோனா வைரஸ் தொற்றுள்ளவர்கள் இணங் காணப்பட்டதை அடுத்து இலங்கையில் கொரோனா தொற்று எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது.


நியுமோனியா தாக்கம் என்பது கொரோனாவின் 4வதும் இறுதியுமான அபாய கட்டம் என்பதும் குறிப்பிடத்தக்கது.