பயன்படுத்தப்பட்ட தற்காலிக முகக் கவசங்களை எரித்து விடுமாறு கோரிக்கை..!

0

கொரோனா தொற்றுக்கு மத்தியில் தற்போது வீடுகளில் சேரும் கழிவுப் பொருட்களை அகற்றுவதில் கூடுதலான கவனம் செலுத்தப்பட வேண்டும் என பொது மக்களுக்கு கோரிக்கை விடுப்பதாக மேல் மாகாண கழிவுப் பொருள் முகாமைத்துவ அதிகார சபை தெரிவித்துள்ளது.


தற்போது பயன்படுத்தப்படும் தற்காலிக முகக் கவசங்கள் போன்ற பொருட்களை முடிந்த வரை எரித்து விடுமாறு மேல் மாகாண கழிவுப்பொருள் முகாமைத்துவ அதிகார சபையின் பணிப்பாளர் நளின் மானப்பெரும சுட்டிக் காட்டியுள்ளார்.


தற்போதைய சூழ்நிலையில் கழிவுப் பொருட்களை அகற்றுவதிலும் உள்ளூராட்சி மன்றங்கள் பிரச்சினைகளை எதிர் நோக்குகின்றன.


எனவே இது தொடர்பிலும் பொது மக்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் முகாமைத்துவ அதிகார சபையின் பணிப்பாளர் நளின் மானப்பெரும மேலும் தெரிவித்துள்ளார்.