சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து அம்பியூலன்ஸ் விபத்து; ஒருவர் பலி..!

0

குருணாகலை – கொக்கரெல்ல பகுதியில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த அம்பியூலன்ஸ் வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.

கொக்கரல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருணாகலை – தம்புள்ளை வீதியில் இன்று சனிக்கிழமை அதிகாலை 1.45 மணியளவில் கொக்கரல்ல வைத்திய சாலைக்கு சொந்தமான அம்புலன்ஸ் விபத்திற்குள்ளானதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

இதன் போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த அம்பியூலன்ஸ் வண்டி வீதியை விட்டு விலகி தூண் ஒன்றில் மோதியுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த சாரதியும் சாரதியின் உதவியாளரும் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சாரதி உயிரிழந்துள்ளார்.

மெதகம-தெஹியத்த கண்டிய பகுதியைச்சேர்ந்த 46 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்த சாரதியின் உதவியாளர் பொல்கொல்ல வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கரல்ல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.