கொரோனாவால் பல மில்லியன் உயிரிழப்புகள்; ஐநா பொது செயலாளர் தெரிவிப்பு..!

0

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தவறினால் பல மில்லியன் கணக்கான மக்கள் உயிரிழக்க நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


கொரோனா வைரஸ் காட்டுத் தீ போல பரவக் கூடியது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச ஒற்றுமை தார்மீகக் கடமை அல்லவெனவும் அது ஒவ்வொருவரினதும் சுயவிருப்பின் பேரில் கடைப்பிடிக்கப்பட வேண்டியதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.


சுகாதார பேரழிவு நிலைமையில் இருந்து உடனடியாக விலகிச் செல்வதுடன் நிலைமையை சமாளிக்க போதிய தயார் படுத்தல்களை மேற்கொள்ளத் தவறிய நாடுகளுக்கு உதவ வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இத்தாலியில் தினமும் கொரோனாவால் 600 பேர் வரை மரணமாகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.