இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா; நோயாளிகள் 70 ஆக அதிகரிப்பு..!

0

இலங்கையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது.

அந்த வகையில் இதுவரை 70 நோயாளிகள் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை பாரிய அளவில் அதிகரிக்கக் கூடிய நிலையே காணப்படுகின்றது.


அத்துடன் பாரிய உயிர் அழிவுகளை ஏற்படுத்திய இத்தாலியுடன் ஒப்பிடும் போது எதிர்வரும் நாட்கள் இலங்கை மக்களுக்கு பாரிய சவாலாகவும், பாரிய இழப்புக்களை ஏற்படுத்தக் கூடும் என சுகாதார தரப்பினர் எதிர்வு கூறியுள்ளனர்.


எனவே நாம் ஒவ்வொருவரும் எமது சமூகப் பொறுப்பை உணர்ந்து செயற்பட வேண்டும், தவறின் பாரிய மனிதப் பேரவலம் ஏற்படுவதை தவிர்க்க முடியாது.


கொரோனா வைரஸ் இலங்கை முழுவதும் பரவி வரும் இந்த நேரத்தில், அரசாங்கத்திற்கும், சுகாதாரத் துறைக்கும் ஒரு பெரிய பொறுப்பு உள்ளது.


அத்துடன் அரசின் செயற் திட்டங்களுக்கு ஆதரவு வழங்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனதும் கடமையும் பொறுப்புமாகும் என்பதை உணர்ந்து செயற்படுவோம்.