தமிழ் தலைநகரில் களமிறங்கும் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் ரூபன் மாமா..!

0

திருகோணமலை மூத்த போராளி ரூபன் மாமா இம்முறை நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் அணியில் போட்டியிடுகின்றார்.

தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனப் பொறுப்பாளராகவும், திருமலை அரசியல் துறை பொறுப்பாளராகவும், தலைமைச் செயலகப் பணி போன்ற பல்வேறு பொறுப்புகளை வகித்து திறம்பட செயல்பட்டவர்.

இறுதிவரை விடுதலைப் போராட்ட களத்தில் நின்றவர். தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளராக முன்னாள் திருகோணமலை மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளர் ஆத்மலிங்கம் ரவீந்திரா (ரூபன்) களமிறக்கப்பட்டுள்ளார்.

தமிழ் தேசிய அரசியலில் புலி வேசம் காட்டி போலி அரசியல் செய்யும் கயேந்திரகுமாரின் சைக்கிள் கட்சி போல் அல்லாது செயல் வீரர்களாக மக்களுடன் மக்களாக இறுதிவரை யுத்த களத்தில் களமாடிய பலர் இம்முறை முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அணியில் களமிறங்கியுள்ளனர்.

உண்மையான, நேர்மையான அரசியலுக்காக முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களின் கரங்களை பலப்படுத்த ஒன்றிணைவோம்.