உலகை உலுக்கும் கொரோனாவிற்கு வைத்திய முறையை கண்டறிந்த சீன வைத்தியர்..!

0

ஒட்டு மொத்த உலகத்தையே உலுக்கி அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றின் கோரத் தாண்டவத்திற்கு முற்றுப் புள்ளி வைப்பதற்காக உலக நாட்டு வைத்தியர்கள், நிபுணர்கள், விஞ்ஞானிகள் என பல தரப்பினரும் போராடி வருகின்றனர்.


இந்நிலையில், கொரோனா சீனாவின் வுஹான் நகரிலுள்ள ஆய்வு கூடமொன்றில் சீன வைத்தியர்கள் அடங்கி குழுவொன்றினால் கொடிய ஆட்கொல்லி கொரோனாவுக்கு எதிராக கண்டு பிடிக்கப்பட்ட “ஸ்டெம் செல் தெரப்பி சிகிச்சை” முறையில் தாம் வெற்றி கண்டுள்ளதாக அந்த வைத்திய குழு தெரிவித்துள்ளது.


அத்துடன் , இச்சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தால், ஆயிரக் கணக்கான உயிர்களைக் காப்பாற்ற முடியும் எனவும் அக்குழுவின் பிரதான வைத்தியரொருவர் தெரிவித்துள்ளார்.

ஸ்டெம் செல் தெரப்பி சிகிச்சை நிபுணரான வைத்தியர் டோங்செங்வு, கொரோனா வைரஸ் நிமோனியாவுடன் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட ஒன்பது நோயாளிகளுக்கு வெற்றிகரமாக சிகிச்சை அளித்துள்ளதாகவும் தெரிய வருகிறது.


இந்நோயாளிகள் சீனாவில், வைத்திய பரிசோதனைக்கு வருவற்கு முன்னர், அவர்கள் பெரும்பாலும் வயதானவர்களாகவும், கடுமையான சுவாச பிரச்சினைகளால் சிரமப்பட்டதாகவும் தெரிய வருகிறது.

இந்நிலையில், நோயாளிகள் ஒன்பது பேருக்கு நேரடியாக , இவ் ஸ்டெம் செல் தெரப்பி சிகிச்சை (யு.சி-எம்.எஸ்.சி) மூலம் நரம்புகளில் ஊசி மூலம் மருந்துகள் செலுத்தப்பட்டதாகவும், அவர் தெரிவித்தார்.

இதனையடுத்து , சிகிச்சையை பெற்ற சில நாட்களில் அவர்கள் அனைவரும் முழுமையான குணமடைந்து விட்டதாகக் கூறப்படுகிறது.


இந்த சிகிச்சை தொடர்பாக வைத்தியர் தொலைக் காட்சிக்கு வழங்கிய செவ்வியில்,

இந்த சிகிச்சையானது ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றும், எனவே இயற்கையாகவே கண்டு பிடிக்கப்பட்ட இம்முறை மூலம் நோயாளிகள் குணமடைந்ததையிட்டு நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் இது ஒரு சிறப்பான சிகிச்சையாகும் என தெரிவித்த அவர், ஆனால் இது ஆரம்பம் தான். இது தொடர்பாக இன்னும் ஆழமாக சென்று ஆராய்ச்சிகள் நடத்த வேண்டி இருக்கிறது


மேலும், கொரோனா வைரஸ் நிமோனியாவுக்கு சிகிச்சையளிக்க ஸ்டெம் செல் தெரப்பி சிகிச்சை பாதுகாப்பானதா மற்றும் செயல்திறன் மிக்கதா என்பதை மேலும் உறுதிப்படுத்தி மருத்துவ பரிசோதனைகளை தாம் செய்து முடிக்க வேண்டிய அவசியமுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.