கோட்டாவின் அதிரடி; தொலைத் தொடர்புகள் அத்தியாவசிய தேவையாக பிரகடனம்..!

0

கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையினை கருத்தில் கொண்டு, தகவல்களை வழங்கும் தொலைத் தொடர்பாடல் சேவைகள் மிகவும் முக்கியத்துவம் பெறுவதனால் அதனை அத்தியாவசிய சேவையாக இலங்கைத் தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.


நாட்டினுள் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாளை முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரையான 8 நாட்கள் சுகாதாரம், போக்குவரத்து உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து அரச மற்றும் தனியார் துறையினருக்கு ‘வீட்டிலிருந்து பணிபுரியும் வாரம்’ என்று அரசாங்கத்தினால் இன்று பிரகடனப்பட்டது.


இந் நிலையிலேயே தொலைத் தொடர்பாடல் சேவைகளை அத்தியாவசிய சேவையாக இலங்கைத் தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு பிரகடனப் படுத்தியுள்ளது.


இதேவேளை தகவல் பரிமாற்றம் மற்றும் தகவல் அறியும் வெளிப்படைத் தன்மை என்பன கடந்த அரசாங்கத்துடன் ஒப்பிடுகையில் கோட்டபாய அரசில் சிறப்பாக காணப்படுகின்றமை பலராலும் வரவேற்கப்படுகின்றது.