கிளிநொச்சி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா தொற்று ?

0

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்திய சாலையில் கொரோனா தொற்று சந்தேகத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இம்மாதம் 2ம் திகதியளவில் ஜெனிவாவிற்கு விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு திரும்பிய நிலையில் இன்று (19.03.2020) காலை 10.30மணியளவில் சுகவீனம் காரணமாக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்திய சாலைக்கு சென்றுள்ளனர்.


இதன் போது அவரை வைத்தியர்கள் பரிசோதனைக்குட்படுத்திய சமயத்தில் கொரோனா தொற்றுக்கான சில அறிகுறிகள் இருப்பதினை வைத்தியர்கள் கண்டறிந்துள்ளனர்.

குறித்த முன்னாள் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் கொரோனா தொற்றுக் கு உள்ளாகியுள்ளரா என்ற மேலதிக பரிசோதனைக்காக 15நிமிடங்களில் விசேட நோயாளர் காவு வண்டி மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.


இவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருக்கு மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே கொரனா தொற்று உள்ளதா என்பதை உறுதிப்படுத்த முடியும் என வைத்திய சாலை தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொ ற்றுத்தொட ர்பில் நோயாளர் இனங் காணப்பட்டால் உடனடியாக அவர்களை தங்க வைத்து சிகிச்சை வழங்கக் கூடிய வகையில் இரண்டு கட்டில்கள் கொண்ட இடம் ஒன்று மாவட்ட பொது வைத்திய சாலையில் தயார் நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதேவேளை கடந்த சில நாட்களாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டமையால் தொடர்பில் இருந்த மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு கோரிக்கை விடப்பட்டுள்ளது.